நான் அரசியலில் நுழைந்தால் 3ம் உலகப்போர் ஏற்பட்டு விடும்: இந்திரா நூயி காமெடி
Most Popular (6 hours)

Trainee Bihar officer shot dead

- business-standard

Mark Ruffalo to play twins

- business-standard

Most Popular (24 hours)

Most Popular (a week)

dinakaran
9 days ago

நான் அரசியலில் நுழைந்தால் 3ம் உலகப்போர் ஏற்பட்டு விடும்: இந்திரா நூயி காமெடி

நியூயார்க்: ‘‘நான் அரசியலில் நுழைந்தால் 3ம் உலகப்போர் ஏற்பட காரணமாகி விடுவேன்’’ என்று பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி தெரிவித்தார். இந்தியாவை சேர்ந்தவர் இந்திரா நூயி. இவர் அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வந்தார். கடந்த 12 ஆண்டுகளாக அந்த பதவியில் நீடித்த அவர், கடந்த 2ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவியில் ராமோன் லகூர்த்தா (54) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அடுத்தாண்டு வரை பெப்சி நிறுவனத்தின் தலைவராக நூயி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரா நூயிக்கு கேம் சேஞ்சர் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது. வணிகத்தில் சாதித்ததற்காகவும், உலகத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது திறமையை பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது.விழாவில் அவரிடம் நீங்கள் அதிபர் டிரம்பின் அமைச்சரவையில் இணைவீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திரா நூயி அளித்த பதில்:என்னை அரசியலில் தொடர்பு படுத்தாதீர்கள். நான் அரசியல் ராஜதந்திரி அல்ல. நான் அரசியலில் நுழைந்தால் 3ம் உலகப்போர் ஏற்பட காரணமாகி விடுவேன். பெப்சி நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த பிறகு தான் வாழ்க்கை என்பது என்ன என உணர்ந்துள்ளேன் என்றார்.

Read on the original site


Highlights at 1745 hrs

- business-standard
Hashtags:   

நான்

 | 

அரசியலில்

 | 

நுழைந்தால்

 |