கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க திருச்சி சிவா கோரிக்கை
Most Popular (6 hours)

Rahul prays at Pitambara Peeth in MP

- punjabnewsexpress.com

Most Popular (24 hours)

Most Popular (a week)

Feeding Young Minds

- indianexpress

dinakaran
2 months ago

கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க திருச்சி சிவா கோரிக்கை

புதுடெல்லி: கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை, 50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்தவர் கலைஞர் என்று திருச்சி சிவா மாநிலங்களவையில் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், அடிதட்டு மக்கள் வாழக்கை மேம்பட பெரும்பங்காற்றியவர் கலைஞர் என்றும், கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட தலைவர் கலைஞர் என்று தெரிவித்தார். கலைஞரின் இழப்பு வரலாற்று பேரிழப்பு என்று மாநிலங்களவையில் பேசிய சிவா தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர், எம்.எல்.ஏ.வாக 13 முறையாக இருந்தவர் கலைஞர் என்று மாநிலங்களவையில் தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read on the original site


2 arrested for raping colleague

- business-standard

People staging protest at Poonch.

- news.statetimes.in
Hashtags:   

கலை

 | 

இலக்கியம்

 | 

அரசியல்

 | 

பன்முக

 |